பூமியை நோக்கி வரும் விண்கல்! – நாசா கூறுவது என்ன?

பூமியை நோக்கி JY1 என்ற விண்கல் என்று வந்துக்கொண்டிருப்பதாக நாசா தெரிவித்துள்ளது. இந்த விண்கல்லின் விட்டம் 160 அடி மற்றும் அதன் வேகம் மணிக்கு 37,070 கிலோமீட்டர்கள் எனவும் இது குறித்து அச்சப்பட வேண்டிய…

பூமியை நோக்கி JY1 என்ற விண்கல் என்று வந்துக்கொண்டிருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.

இந்த விண்கல்லின் விட்டம் 160 அடி மற்றும் அதன் வேகம் மணிக்கு 37,070 கிலோமீட்டர்கள் எனவும் இது குறித்து அச்சப்பட வேண்டிய அவசியமில்லை எனவும் நாசா அறிவுறுத்தியுள்ளது.

இந்த சிறுகோள் சுமார் 4.16 மில்லியன் மைல் தொலைவில் பூமியை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது சந்திரனுக்கான தூரத்தை விட 17 மடங்கு அதிகமாகும்.

குறித்த விண்கலத்தின் செயற்பாட்டை நாசா துல்லியமாக கண்காணிக்கிறது. மேலும் இதனால் எந்த ஆபத்தும் ஏற்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.