ம.பொ.சி-க்கு ஒரு மணிமண்டபம் கட்ட வேண்டும்-சீமான் வலியுறுத்தல்

ஒரு சமூகத்திடம் இருந்து சினிமா துறையை பொதுமைப்படுத்தியதற்கு திராவிட இயக்கங்கள் தான் காரணம் என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். எங்களுக்கு எந்தவித மாற்று கருத்தும் இல்லை என சீமான் தெரிவித்துள்ளார். அதை ஆர்எஸ்எஸ் தங்களது…

ஒரு சமூகத்திடம் இருந்து சினிமா துறையை பொதுமைப்படுத்தியதற்கு திராவிட
இயக்கங்கள் தான் காரணம் என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். எங்களுக்கு எந்தவித மாற்று கருத்தும் இல்லை என சீமான் தெரிவித்துள்ளார்.

அதை ஆர்எஸ்எஸ் தங்களது கொள்கைகளை கொளுத்துவதாக நினைத்துக் கொள்கிறார்கள். சிலம்பு செல்வர் சுதந்திரப் போராட்ட தியாகியான ம.பொ.சி 27 ஆம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது திருவுருவ சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்ட உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகு சீமான் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய சீமான் பேசியதாவது:
சிலம்புச் செல்வர் என்று தமிழ் மக்களால் அழைக்கப்படும் ஜயா ம.பொ.சி யின் நினைவை
போற்றுகிற நாள். நீண்ட நாட்களாக வைத்திருக்க கூடிய கோரிக்கைகள், ம.பொ.சி க்கு
ஒரு மணிமண்டபம் கட்ட வேண்டும், தாம்பரம் அருகே ஊரப்பாக்கம் பக்கத்தில் புதிதாக
அமைய உள்ள பேருந்து நிலையத்திற்கு ம.போ.சி என பெயர் சூட்ட வேண்டும்.

தலைவர்களின் பெயரில் அரசு விருது வழங்கி வரும் நிலையில் அவரது பெயரிலும் தமிழக
அரசு விருது வழங்க கேட்டுக் கொள்கிறேன். சட்டமேதை அம்பேத்கரும், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமும் இந்த வர்ணத்தை தான் சார்ந்தவர்கள் என்று இருக்கும் புத்தகங்களை ஒரு காலத்தில் நாங்கள் கொளுத்துவோம் என்று சொல்கிறோம்.

ஒரு சமூகத்திடம் இருந்த திரைத் துறையை பொதுமைப்படுத்தியது அன்று இருந்த திராவிட இயக்கங்களும் திராவிட தலைவர்களும் தான். அண்ணா, எம்ஜிஆர், கருணாநிதி இவர்களால் தான் மாறியது என்று அனைவருக்கும் தெரியும்.

அருண்மொழி சோழனை இந்து மன்னர் என்று பேசுவது வேடிக்கையான ஒன்று கேவலமான ஒன்று.  அந்த காலத்தில் நாடும் கிடையாது மதமும் கிடையாது. உலகத்திற்கே தெரியும் அவர் சைவர் என்று.

தமிழர் அடையாளங்களில் புகழ்பெற்றவர்கள் யார் யார் இருக்கிறார்கள். சிவனாக
இருக்கட்டும் முருகன் ஆக இருக்கட்டும் யாராக இருந்தாலும் ஆரியர்கள்
தங்களுக்கானவர்களாக மாற்றிக் கொள்கிறார்கள்.

வெற்றிமாறன் இவ்வாறு இவையெல்லாம் அனுமதிக்க கூடாது என்று பேசுவது எனக்கு
பெருமை என் இனத்திற்கு பெருமை. திராவிட மாடல் ஆட்சி என்றால் என்ன என ஒரு தனியார் தொலைக்காட்சியின் நெறியாளர் எழுப்பிய கேள்விக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அம்மாவின் ஆட்சியும் கலைஞரின் ஆட்சியும் தான் திராவிட ஆட்சி என்று கூறுகிறார்.


இது என்ன திராவிட மாடல் ஆட்சி? நிலத்தை சுரண்டுவது மக்களை பிடித்து வைத்து பழக
கோடி ரூபாய் ஊழல் செய்வது இதுதான் திராவிட மாடலா? இவர்கள் இவர்கள் தமிழ் தமிழர் என்று பேசிக் கொண்டே அவற்றை அளிக்கிறார்கள் இவர்களின் சித்தாந்தத்தை நாம் எவ்வாறு ஏற்பது?

பெரியாரை நாங்கள் எதிர்க்கவில்லை. அதே நேரம் பெரியார் தமிழ் தேசிய இனத்தின்
தலைவர் என்பதை நாங்கள் ஏற்கவில்லை. பெரியார் தான் பெண்ணுரிமை சமூக நீதிக்கு
போராடினார் என்று சொல்வது தான் நாங்கள் எதிர்க்கிறோம். பெரியாரும் போராடினார்
என்பதை நாங்கள் ஏற்கிறோம். பெரியாருக்கு முன்பே எங்கள் தாத்தா ரெட்டமலை
சீனிவாசன், எங்கள் ஐயா பண்டிதர் எல்லாரும் போராடி இருக்கிறார்கள். பெரியார்
மட்டும்தான் போராடினார் என்று கட்டமைப்புதான் நாங்கள் தொடர்ந்து எதிர்த்து
வருகிறோம்.

பெரியாரே சிங்காரவேலரிடமிருந்து தான் நான் கம்யூனிஸ கொள்கைகளை
கற்றுக் கொண்டேன் என்றார். ஆனால் இங்கு பெரியாரை பற்றி மட்டும் தான் திமுக அரசு
பேசிக் கொண்டிருக்கிறது. பராசக்தி படம் ஒரு பெரிய புரட்சியை செய்தது.

பராசக்தி படத்தில் கலைஞர் வசனம் மாற்றியதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.
வெற்றிமாறன் கருத்திற்கு எந்த மாற்றுக்கருத்தும் எனக்கு இல்லை என்றார் சீமான்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.