புதிய வாகன சட்டத்திற்கு பயந்து டிராக்டர் ஓட்டி செல்லும் ஒருவர் ஹெல்மெட் அணிந்து சென்றது அனைவரின் கவனத்தை ஈர்த்தது.
தமிழ்நாட்டில் சாலை விபத்துக்கள், விதிமீறல்கள் அதிகரித்து வரும் நிலையில் திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் தொடர்பான அரசாணையை தமிழ்நாடு அரசு கடந்த அக்டோபர் 20ம் தேதி வெளியிட்டது. அதன்படி போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர்.
எனினும் இவ்வளவு பெரிய தொகையை பொதுமக்களால் செலுத்த இயலாது எனவே புதிய விதிமுறைகளை வாபஸ் பெற வேண்டும் என்கிற கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளன. ஆனாலும், இப்படியான அபராதம் இருந்தால்தான் விதிகள் சரியாக கடைபிடிக்கப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சியில் விவசாய பணிக்காக பயன்படுத்தும் சிறிய ரக டிராக்டர் ஒன்றை ஓருவர் ஒட்டி சென்றார். நகர சாலையில் செல்லும்போது ஹெல்மெட் அணியாமல் சென்றால் அபராதம் விதிப்பார்களோ என்ற எண்ணத்தில் தலைக்கவசம் அணித்து மினி டிராக்டரை ஓட்டி சென்றுள்ளார். இது இரு சக்கர வாகன ஓட்டிகள் உள்பட சாலையில் செல்வோர் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. தற்போது, இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.







