ஹை ஹீல்ஸ் (high heels) காலணி அணிந்து 100 மீட்டரை 12.82 வினாடிகளில் ஓடி ஸ்பெயின் வீரர் புதிய உலக சாதனை நிகழ்த்தியுள்ளார்.
ஹை ஹீல்ஸ் காலணி அணிந்து கொண்டு நடப்பது நம்மில் பலருக்கு சவால் நிறைந்த விஷயம். லேசாக தடுமாறினாலும் கீழே விழுந்து விழுவோம் என்பதில் சந்தேகமில்லை. ஹை ஹீல்ஸ் அணிய விருப்பப்படும் பல பெண்கள் கூட அதன் ஆபத்தை கண்டு அணியாமல் தவிர்த்து விடுவதும் உண்டு.
ஆனால் ஒருவர் ஹை ஹீல்ஸ் காலணி அணிந்து ஓட்டப்பந்தயம் ஓடியுள்ளார் என்றால் நம்ப முடிகிறதா? அதுவும் 100 மீட்டர் தூரத்தை 12.82 வினாடிகளில் கடந்தார் என்றால் ஆச்சரியமாக உள்ளதா? ஸ்பெயின் நாட்டை சேர்ந்த 34வயதான கிறிஸ்டியன் ராபர்டோ லோபஸ் ரோட்ரிக்ஸ் தான் அந்த சாதனைக்கு சொந்தக்காரர்.
இதில் சிறப்பு அம்சம் என்னவென்றால் உலகின் அதிவேக மனிதர் என அழைக்கப்படும் உசைன் போல்ட்டின் 100 மீட்டர் ட் உலக சாதனையை விட 3.24 வினாடிகள் குறைவாக அவர் ஹை ஹீல்ஸ் அணிந்து ஓடியுள்ளார். இது தொடர்பான வீடியோவை அவர் இணையத்தில் பகிர்ந்துள்ளார். அவரின் இந்த வீடியோ லைக்குகளை அள்ளிக்குவித்து வருகிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.