பயணிக்க வேண்டிய தூரம் அதிகம் : நியூஸ் 7 தமிழுக்கு குகேஷ் பிரத்யேக பேட்டி!

பயணிக்க வேண்டிய தூரம் அதிக அளவில் உள்ளதாக இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ் தெரிவித்துள்ளார். சர்வதேச செஸ் தரவரிசை பட்டியலில் 2 ஆயிரத்து 750 புள்ளிகளை கடந்த உலகின் முதல் இளம் வீரர்…

பயணிக்க வேண்டிய தூரம் அதிக அளவில் உள்ளதாக இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ் தெரிவித்துள்ளார்.

சர்வதேச செஸ் தரவரிசை பட்டியலில் 2 ஆயிரத்து 750 புள்ளிகளை கடந்த உலகின் முதல் இளம் வீரர் என்ற பெருமையை இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ் பெற்றுள்ளார்.

மேலும் இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரர் ஆகியுள்ளார் தமிழகத்தை சேர்ந்த குகேஷ். சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தரவரிசை பட்டியலில் (லைவ் ரேட்டிங்) இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்தை அவர் முந்தியதன் மூலம் இந்த சாதனையை படைத்துள்ளார்.

உலக தரவரிசை பட்டியலில் 2755.9 ரேட்டிங் உடன் தற்போது 9-வது இடத்தில் உள்ளார். இது லைவ் ரேட்டிங் ஆகும். விஸ்வநாதன் ஆனந்த் 2754.0 ரேட்டிங் உடன் உள்ளார். குகேஷுக்கு விஸ்வநாதன் ஆனந்த் தான் ரோல் மாடல்.. அவர் நியூஸ் 7 தமிழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியை தற்போது பார்க்கலாம்.

“கடந்த சில வருடங்களாக எனது வளர்ச்சி மகிழ்ச்சி அளிக்கிறது. குறிப்பாக கடந்த வருடம் ஒலிம்பியாட் தொடரில் நான் விளையாடிய விதம், இந்த ஆண்டு ஃபிடே ரேட்டிங்கில் 2750 புள்ளிகளை தாண்டி இருப்பதில் மகிழ்ச்சி.விஸ்வநாதன் ஆனந்தை கடந்து முதலிடத்திற்கு முன்னேறியது மன நிறைவை தருகிறது. இன்னும் நிறைய தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. எண்ணற்ற சாதனைகள் படைக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.