”குடியரசுத் தலைவரின் விருந்திற்கு எதிர்க்கட்சி தலைவர் அழைக்கப்படாது கண்டிக்கத்தக்கது “ – ப.சிதம்பரம்

”குடியரசுத் தலைவரின் விருந்தில் எதிர்க்கட்சி தலைவர் அழைக்கப்படாது கண்டிக்கத்தக்கது “ என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். ஜி-20 மாநாடு டெல்லியில் கோலாகலமாக தொடங்கியுள்ளது. இன்று மற்றும் நாளை ஆகிய இரு தினங்கள் நடைபெறும் இந்த மாநாட்டில்…

”குடியரசுத் தலைவரின் விருந்தில் எதிர்க்கட்சி தலைவர் அழைக்கப்படாது கண்டிக்கத்தக்கது “ என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

ஜி-20 மாநாடு டெல்லியில் கோலாகலமாக தொடங்கியுள்ளது. இன்று மற்றும் நாளை ஆகிய இரு தினங்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உள்ளிட்ட உலக தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

ஜி20 மாநாட்டையொட்டி குடியரசுத் தலைவர் அளிக்கும் விருந்தில் இந்த மாநாட்டில் கலந்து கொண்ட நாடுகளின் தலைவர்கள் மற்றும் இந்தியாவின் முக்கியமான தொழிலதிபர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த விருந்தில் எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இதற்கு  காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்.பி.யுமான ப.சிதம்பரம், தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது..

“ உலகத் தலைவர்களுக்கான அரசு விருந்தில் அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவரை, வேறு எந்த ஜனநாயக நாட்டின் அரசும் அழைக்காமல் இருந்ததில்லை. இந்த விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கையை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.

ஜனநாயகம் அறவே அற்ற  எதிர்க்கட்சிகள் இல்லாத ஒரு நாட்டில்தான் இது போன்று நடக்கும். இந்தியா இன்னும் ஜனநாயகமும் எதிர்க்கட்சியும் இல்லாமல் போகும் நிலையை எட்டவில்லை’’ என ப.சிதம்பரம் தனது X தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.