தீபாவளிக்கு தமிழ் படங்களோடு களமிறங்கும் ”தி மார்வல்ஸ்”!

”தி மார்வல்ஸ்” ஹாலிவுட் திரைப்படம் தீபாவளியன்று திரைக்கு வரும் என அறிவித்து படக்குழு ட்ரெயிலரை வெளியிட்டுள்ளது. 2019-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற ‘கேப்டன் மார்வெல்’ படத்தின் தொடர்ச்சியாக உருவாகி உள்ளது…

”தி மார்வல்ஸ்” ஹாலிவுட் திரைப்படம் தீபாவளியன்று திரைக்கு வரும் என அறிவித்து படக்குழு ட்ரெயிலரை வெளியிட்டுள்ளது.

2019-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற ‘கேப்டன் மார்வெல்’ படத்தின் தொடர்ச்சியாக உருவாகி உள்ளது ‘தி மார்வெல்ஸ்’. இந்த படத்தில் 3 சூப்பர் ஹீரோயின்கள் இணைந்திருக்கிறார்கள். ‘கேப்டன் மார்வெல்’ படத்தில் நடித்த ப்ரி லார்சன், சமீபத்தில் ஓ.டி.டி-யில் வெளியான ‘மிஸ்.மார்வெல்’ வெப்சீரிஸில் இடம் பெற்றிருந்த கமலா கானும், ‘வாண்டாவிஷன்’ தொடரின் சூப்பர் ஹீரோயின் மோனிகா ராம்போவும் இந்த படத்தில் இணைந்துள்ளனர்.

The Marvels trailer released. | The Marvels | மூவர் கலக்கும் 'தி மார்வெல்ஸ் ' டிரெய்லர்

ப்ரி லார்சன் தவிர டெயோனா பாரிஸ், இமான் வெல்லானி,, சாமுவேல் எல். ஜாக்சன், ஜாவே ஆஷ்டன் மற்றும் பார்க் சியோ- ஜூன் ஆகியோர் நடித்துள்ளனர். நியா டகோஸ்டா இந்த படத்தை இயக்கி உள்ளார்.இந்த படத்தின் ட்ரெயிலர் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளிலில் வெளியாகிறது. தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளில் இதன் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. சமீபத்திய வருடங்களாக மார்வெல் சூப்பர் ஹீரோ படங்களுக்கு வரவேற்பு குறைந்து வரும் நிலையில், மூன்று கதாநாயகிகளை மார்வல் நிறுவனம்  களம் இறக்கியுள்ளது.

இந்த திரைப்படம் தீபாவளிக்கு களம் இறங்க தயாராகி வருகிறது. ஏற்கனவே தமிழில்

ஜிகர்தண்டா – 2, ஜப்பான், அயலான் உள்ளிட்ட படங்கள் வரிசையில் இருக்கும் நிலையில், இந்த படத்தின் வருகையால் ஹாலிவுட் ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.