நண்பர் இறந்த துக்கத்தில் அவர் உடல் எரியூட்டப்பட நெருப்பில் குதித்து உயிரை மாய்த்துக்கொண்ட நபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாக்லா கங்கர் பகுதியில் வசிக்கும் அசோக் (42) புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சனிக்கிழமை காலை உயிரிழந்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து அவரது இறுதிச் சடங்குகள் காலை 11 மணியளவில் யமுனைக் கரையில் நடைபெற்றன. அவர் உடல் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் முன்பு எரியூட்டப்பட்டது. இந்நிலையில் இறுதிச் சடங்கில் பங்கேற்ற அவரது நண்பர் ஆனந்த் திடீரென உடல் எரியும் நெருப்பில் குதித்துள்ளார்.
அங்கு நின்றவர்கள் அவரை நெருப்பிலிருந்து வெளியே இழுத்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இருப்பினும், மருத்துவமனை செல்லும் வழியில் ஆனந்த் உயிரிழந்தார் என்று அதிகாரிகள் கூறினார்.







