31.7 C
Chennai
September 23, 2023
முக்கியச் செய்திகள் இந்தியா

தமிழகத்தில் மீனவர் மாதிரி கிராமமா?

தமிழகத்தில் மீனவர் மாதிரி கிராமம் அமைச்சக்க மத்திய அரசிற்கு ஏதேனும் உத்தேசம் இருக்கிறதா? என நாடாளுமன்றத்தில் எம்பி தமிழச்சி தங்கப்பாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார். 

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் கடந்த 18-ம் தேதி தொடங்கியது. ஜிஎஸ்டி வரிவிதிப்பு, பணவீக்கம், அக்னிபாதை திட்டத்தை எதிர்த்து, போன்ற பல்வேறு பிரச்னைகள் குறித்த கேள்விகளை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மேலும் நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதற்கு எதரிப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் ஈடுபட்டனர்.

இந்நிலையில் தமிழக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி நேரத்தின் போது, தமிழகத்தில் மீனவர்கள் மாதிரி கிராமத்தை ஏற்படுத்தும் உத்தேசம் மத்திய அரசின் பரிசீலணையில் உள்ளதா, மீன்பிடி தடைகாலங்களில் மீனவர்கள் நல்வாழ்வுக்கு எத்தகைய உதவிகள் செய்யப்பட்டன என்ற கேள்விகளை அவையின் முன் வைத்தர்.

இதற்கு பதிலளித்து பேசிய மீன்வளத்துறை அமைச்சர் பர்சோட்டம் ரூபாலா, மீன்பிடி தடைக்காலங்களில் மீனவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.3000ஐ மத்திய அரசு தனது பங்களிப்பாக கொடுத்து வருகிறது. இதன் மூலம் 8,12,195 மீனவர் குடும்பங்கள் பயனடைந்துள்ளனர்.

மேலும் பிரதமரின் மீனவர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் இருந்து மீனவர் மாதிரி கிராமத்தை ஏற்படுத்துவதற்கு எந்த உத்தேசத் திட்டத்தையும் தமிழக அரசு சமர்பிக்கவில்லை. இந்த திட்டத்தின் கீழ் 2021-22ம் ஆண்டில் 1.70 லட்சம் பேர் தமிழகத்தில் பயனடைந்து வருகின்றனர். இதற்கான மொத்த செலவினம் ரூ.7650 கோடியாகும். இதில் மத்திய அரசின் பங்கு ரூ.2550 கோடியாகும் என்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to TelegramShare to Print

Related posts

சென்னை மெட்ரோ இரயில் நிலையங்களில் கிராமியக் கலை நிகழ்ச்சிகள்

Arivazhagan Chinnasamy

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்; 6 நாட்களில் ரூ.10 லட்சம் அபராதம் விதிப்பு!

Arivazhagan Chinnasamy

கொரோனாவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் மத்திய அரசு தோல்வி: சோனியா காந்தி குற்றச்சாட்டு!

Halley Karthik