ஆட்சியரின் கார் முன்பு அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட தம்பதி!

சிவகங்கையில் ஆட்சியரின் காரின் முன்பு அமர்ந்து தம்பதி  திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரைக்குடி செஞ்சை ஊரணி பகுதியில் வசித்து வருபவர்கள் சரவணன், பிரியா தம்பதி. இவர்கள் குறவர் இனத்தை…

சிவகங்கையில் ஆட்சியரின் காரின் முன்பு அமர்ந்து தம்பதி  திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காரைக்குடி செஞ்சை ஊரணி பகுதியில் வசித்து வருபவர்கள் சரவணன், பிரியா
தம்பதி. இவர்கள் குறவர் இனத்தை சேர்ந்தவர்களாவர். அப்பகுதியில் உள்ள
1.5 செண்ட் அளவிலான இடத்தில், குடிசை வீடு அமைத்து வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் அந்த இடத்தை தனக்கு சொந்தமான இடம் என கூறி, அதே
பகுதியை சேர்ந்த நாகசாமி, ரேவதி தம்பதியினர் அடிக்கடி தகராறு செய்து
வருவதுடன், கடந்த சில நாட்களுக்கு முன்னர் தங்கள் மீது தாக்குதல்
நடத்தியதுடன், தங்களின் குடிசைக்கு தீ வைத்து எரித்ததாகவும், மேலும் அதில்
தங்களுக்கு சொந்தமான 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் அனைத்தும்
எரிந்துவிட்டது என்றனர்.

மேலும், ரேசன் கார்டு, ஆதார் உள்ளிட்ட அனைத்து ஆவனங்களும் எரிந்துவிட்டதாகவும்,
இது குறித்து காரைக்குடி தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தும், வழக்கு பதிவு
செய்ததுடன் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறி, சிவகங்கை
ஆட்சியர் அலுவலகம் வந்த சரவணன், பிரியா தம்பதியர் ஆட்சியர் வெளியே காரில்
கிளம்பிய போது அவரின் காரை மறித்து, தங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது
நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கைவிடுத்தனர்.

கு. பாலமுருகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.