ஜெயிலர் திரைப்படம் இதுவரை உலகம் முழுவதும் ₹640 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீசானது. இதில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சுனில், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.
ரசிகர்களின் பலத்த வரவேற்பை பெற்ற இப்படம் முதல் வார முடிவில் உலகம் முழுவதும் சுமார் ரூ.375.40 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக சன் பிக்சர்ஸ் அறிவித்தது.
இதுவரை சுமார் 600 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.
இந்நிலையில், ஜெயிலர் திரைப்படம் இதுவரை உலகம் முழுவதும் ₹ 640 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் ₹ 650 கோடி கிளப்பில் சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.







