கடற்கரையில் குவிந்த நீல ஜெல்லி மீன்கள்; நெட்டிசன்களை திகைக்க வைத்த காட்சிகள்!

கலிபோர்னிய கடற்கரையில் நீல ஜெல்லிமீன் குவிந்திருக்கும் காட்சி இணையத்தில் கசிந்ததால், நெட்டிசன்கள் இதனை தங்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். நம்பமுடியாத அளவிற்கு தெற்கு கலிபோர்னியா கடற்கரையில் நீல ஜெல்லிமீன்கள் கரையொதுங்கியுள்ளன. அவற்றை இணையத்தில்…

கலிபோர்னிய கடற்கரையில் நீல ஜெல்லிமீன் குவிந்திருக்கும் காட்சி இணையத்தில் கசிந்ததால், நெட்டிசன்கள் இதனை தங்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

நம்பமுடியாத அளவிற்கு தெற்கு கலிபோர்னியா கடற்கரையில் நீல ஜெல்லிமீன்கள் கரையொதுங்கியுள்ளன. அவற்றை இணையத்தில் பார்த்து பலர் திகைத்தனர். நீங்கள் ஒரு கடற்கரையில் நடந்து செல்லும் போது, ​​​​ஆயிரக்கணக்கான நீல நிற உயிரினங்கள் கரையில் அடித்துச் செல்லப்படுவதைக் கண்டால் எப்படி இருக்கும்?

அதுவும் அந்த காட்சி சையின்ஸ் ஃபிக்ஷன் படத்தின் காட்சி போல் இருந்தால்?… நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும், இந்த சிறிய நீல நிற உயிரினங்கள் உண்மையில் தெற்கு கலிபோர்னியா கடற்கரைகளில் குவியல் குவியலாகக் கரை ஒதுங்கியுள்ளன.

இந்த பதிவு சில நாட்களுக்கு முன்பு பகிரப்பட்டது. பதிவிட்டதிலிருந்து பலராலும் பகிரப்பட்டுள்ளது. மேலும் பலர் நம்ப முடியாத இந்த காட்சியைப் பார்த்து தங்களின் கமெண்ட்டுகளை இட்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.