சென்னையை அடுத்த பல்லாவரத்தில் வீட்டிற்கு வெளியில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது குழந்தையை குதிரை எட்டி உதைத்ததில் அந்தக் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
சென்னை பல்லாவரம் அடுத்த சங்கர் நகர், பம்மல் பகுதியில் வசித்து வருபவர் டில்லி ராஜ்(39), கால் டாக்சி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.
இவரது 4 வயது குழந்தை கெளதம்(4), வீட்டிற்கு வெளியில் விளையாடிக் கொண்டிருந்த போது மேய்ச்சலில் இருந்த குதிரை ஒன்று குழந்தையின் மார்பில் எட்டி உதைத்ததில் குழந்தை வலியால் துடித்தது.
இதையடுத்து, உடனடியாக குழந்தையை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்து குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பார்த்தபோது குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சங்கர் நகர் போலீசார் 174 வது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.








