தமிழக வெற்றி கழகத்தில் மாற்றமா? வெளியான புதிய தகவல்…

‘தமிழக வெற்றி கழகம்’ என்ற தனது கட்சியின் பெயரில் ‘க்’ என்ற எழுத்தை சேர்த்து ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்று மாற்ற, அதன் தலைவர் விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   நடிகர் விஜய்…

‘தமிழக வெற்றி கழகம்’ என்ற தனது கட்சியின் பெயரில் ‘க்’ என்ற எழுத்தை சேர்த்து ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்று மாற்ற, அதன் தலைவர் விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்குவார் என நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், பிப்.2-ம் தேதி ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற புதிய கட்சியை தொடங்கினார்.  அந்த கட்சியின் தலைவராக நடிகர் விஜய் அறிவிக்கப்பட்டு அதன் பிறகு தனது கட்சியின் கொள்கை மற்றும் தேர்தலில் நேரடியாக களமிறங்குவது அதிகாரப்பூர்வ அறிவிப்பை 3 பக்க அறிக்கையாக வெளியிட்டார்.

இந்நிலையில் கட்சியின் பெயர் தமிழக வெற்றி கழகமா அல்லது தமிழக வெற்றிக் கழகமா என்ற கேள்வி எல்லோருக்கும் ஒரு குழப்பமாக இருந்தது.  இதற்கு பல்வேறு விமர்சனங்களும் முன்வந்தன. அந்த விமர்சனங்களை ஏற்றுக் கொண்டு அதற்கு தீர்வு காணும் வகையில், அக்கட்சியின் தலைவர் விஜய், கட்சியின் பெயரில் ‘க்’ என்ற எழுத்தை பயன்படுத்த வேண்டும் என தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்கள்: வெளியானது ‘ரணம்’ திரைப்படத்தின் டிரைலர்!

 

 

இதனைத் தொடர்ந்து நேற்று முதல் அக்கட்சியின் பேனர்களில் ‘க்’ சேர்க்கப்பட்டு ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்றே பயன்படுத்தப்பட்டு வருகிறது.  ரசிகர்களும், கட்சி நிர்வாகிகளும் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற பெயரை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.