செறிவூட்டப்பட்ட அரிசி திட்டத்திற்கு தடை கோரிய வழக்கு! – மத்திய, மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்திற்கு தடை கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ் தேசிய பேரியக்கத்தில் உள்ள மகளிர் ஆணயத்தின் செயலாளர் கனிமொழி மணிமாறன் சென்னை…

செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்திற்கு தடை கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ் தேசிய பேரியக்கத்தில் உள்ள மகளிர் ஆணயத்தின் செயலாளர் கனிமொழி மணிமாறன் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் கூறப்படுள்ளதாவது:

தலசீமியா, ரத்த சோகை உள்ளவர்கள் இரும்புசத்து கொண்ட செறிவூட்டப்பட்ட உணவுகளை சாப்பிடக்கூடாது. எந்த ஒரு முறையான ஆய்வுகளையும் மேற்கொள்ளாமல், மக்களுக்கு வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மக்களின் ஏழ்மையை பயன்படுத்திக் கொண்டு, நாட்டில் மிகப்பெரிய உடல் நலபாதிப்பு ஏற்படுத்தும் வகையிலான கார்ப்பேரேட் நிறுவனங்களின் மறைமுகத்திட்டமாக உள்ளது என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை பரிசீலித்த உயர்நீதிமன்றம் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 8 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.