33.9 C
Chennai
September 26, 2023
முக்கியச் செய்திகள் சினிமா

கங்கனா தான் ஒரிஜினல் சந்திரமுகி -நடிகர் ராகவா லாரன்ஸ்…

கங்கனா தான் ஒரிஜினல் சந்திரமுகி என நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். 

கடந்த 2005ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியான திரைப்படம் சந்திரமுகி. மலையாளத் திரைப்படமான மணிச்சித்திரதாழ் திரைப்படத்தின் மறுஆக்கமாக உருவான சந்திரமுகி திரைப்படம் 200 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி பெரும் வெற்றி பெற்றதோடு வசூலையும் அள்ளி குவித்தது.இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் நடித்து வருகிறார். மேலும் வடிவேலு, கங்கனா ரணாவத் ராதிகா, வடிவேலு, லக்‌ஷ்மி மேனன், சிஷ்டி டாங்கே, ரவிமரியா என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இப்படம் விநாயகர் சதுர்த்தியை (செப்.15) அன்று வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை தனியார் பொறியியல் கல்லூரியில் கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி நடைபெற்றது. இந்த படத்தில் மொத்தம் 10 பாடல்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. சந்திரமுகி 2 படத்தின் டிரைலர் வெளியீடு பற்றி ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர்.

இந்நிலையில் இந்த படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பை படக்குழு தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பதிவிட்டுள்ளது. தற்போது இந்த டிரைலர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சந்திரமுகி பாகம் 1 படத்தில் இடம்பெற்றிருக்கும் ராஜாதிராஜ, ராஜ கம்பீர என்ற டயலாக் கொண்டு இந்த டிரைலர் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

Chandramukhi 2 - Trailer (Tamil) | Ragava, Kangana Ranaut | P Vasu | MM Keeravaani | Subaskaran

இந்நிலையில், இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் செய்தியாளர் சந்திப்பில், எல்லோரும் ஜோதிகா மேடம் மாதிரியே கங்கனா மேடம் நடித்துள்ளாரா எனக் கேட்கிறார்கள். ஜோதிகாவையும் கங்கனாவையும் ஒப்பிடவே கூடாது. எனெனில் ஜோதிகா மேடம் தன்னை சந்திரமுகியாக நினைத்து நடித்துள்ளார். ஆனால்  கங்கனா தான் ஒரிஜினல் சந்திரமுகியாக நடித்துள்ளார் என தெரிவொத்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை: மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

EZHILARASAN D

விநாயகர் சதுர்த்தி – மதுரையில் பூக்கள் விலை உச்சம்

Web Editor

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் வட இந்திய பொறியாளர்கள்-டி.ஆர்.பாலு கண்டனம்

Web Editor