திருவொற்றியூரில் நடுரோட்டில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்!

சென்னை திருவொற்றியூரில் நடுரோட்டில் கொழுந்து விட்டு கார் தீப்பற்றி எரிந்தது. அதிர்ஷ்டவசமாக கார் ஓட்டுநர் உயிர் தப்பினார். தனியார் நிறுவனத்தின் ஊழியரை இறக்கி விட்டு வீடு திரும்பும் போது தீடீரென கார் தீப்பற்றி கொழுந்துவிட்டு…

சென்னை திருவொற்றியூரில் நடுரோட்டில் கொழுந்து விட்டு கார் தீப்பற்றி எரிந்தது.
அதிர்ஷ்டவசமாக கார் ஓட்டுநர் உயிர் தப்பினார்.

தனியார் நிறுவனத்தின் ஊழியரை இறக்கி விட்டு வீடு திரும்பும் போது தீடீரென கார்
தீப்பற்றி கொழுந்துவிட்டு எரிந்து நாசமாகியுள்ளது. மடிப்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் சதீஷ்.

இவருக்கு சொந்தமான காரில் பெருங்களத்தூரில் அமைந்துள்ள தனியார் ஐடி நிறுவன ஊழியர்களை  ஏற்றிச் சென்றுவிட்டு பணி முடிந்தபின் மீண்டும் வீட்டிற்கு கொண்டு
வந்து விடும் சர்வீஸினை செய்து வருகின்றனர். வழக்கம்போல் இன்று அந்த தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களை ஏற்றி கொண்டு திருவொற்றியூர் வரை வீடுகள் உள்ளவர்களை ஒவ்வொருவராக இறக்கி விடுவதற்காக வந்துள்ளனர். இறுதியாக காலடிப்பேட்டையில் ஊழியரை இறக்கி விடுவதற்காக காரினை ஓட்டுநர் ராம்கி(30) என்பவர் இயக்கி வந்தார்.

காலடிப்பேட்டையில் ஊழியரை இறக்கி விட்டு விட்டு ராம்கி எண்ணுரில் உள்ள
வீட்டிற்கு செல்ல முற்பட்டபோது திருவொற்றியூர் அஜாக்ஸ் பேருந்து நிறுத்தம்
அருகே திடீரென காரில் இருந்து புகை வெளியேறியுள்ளது. பதறிய ஓட்டுநர் ராம்கி காரை நிறுத்தி”விட்டு இறங்கி பார்ப்தற்குள் கார் மளமளவென கொழுந்து விட்டு தீபற்றி எரிந்தது.

உடனடியாக திருவொற்றியூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தரவே நிலைய அலுவலர் வாசுதேவன் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருந்த போதிலும் கார் முழுவதும் எரிந்து நாசமாகியது. இதுதொடர்பாக திருவொற்றியூர் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
கார் தீப்பற்றி மளமளவென எரிந்ததில் மயிரிழையில் ஓட்டுநர் உயிர் தப்பியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.