தருமபுரி ராமாபுரம் காவல் நிலையத்தில் கர்ப்பிணி காவலருக்கு வளைகாப்பு விழா!

ராமாபுரம் காவல் நிலையத்தில் கர்ப்பிணி போலீசுக்கு போலீசார் வளைகாப்பு நடத்தினர். தருமபுரி மாவட்டம்,  ஏலகிரி கிராமத்தை சேர்ந்தவர் தீபிகா.  இவர் தருமபுரி மாவட்டம் ராமாபுரம் காவல் நிலையத்தில் பெண் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர்…

ராமாபுரம் காவல் நிலையத்தில் கர்ப்பிணி போலீசுக்கு போலீசார் வளைகாப்பு நடத்தினர்.

தருமபுரி மாவட்டம்,  ஏலகிரி கிராமத்தை சேர்ந்தவர் தீபிகா.  இவர் தருமபுரி மாவட்டம் ராமாபுரம் காவல் நிலையத்தில் பெண் காவலராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ள நிலையில் குழந்தை பிறப்பிற்காக விடுமுறையில் சொந்த ஊருக்கு செல்ல இருந்த நிலையில் கர்ப்பிணியான இவருக்கு ராமாபுரம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர்கள் கோவிந்தராஜ்,  ராஜலட்சுமி மற்றும் போலீசார் தங்கள் வீட்டு இல்ல நிகழ்ச்சி போல் வளைகாப்பு விழா நடத்தினார்கள்.

இதையும் படியுங்கள்:முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

இதில் தாய்வீட்டு சீதனம் போன்று சீர்வரிசை தட்டுகளில் பழம்,  இனிப்பு உள்ளிட்ட
பொருட்கள் வைத்து 7 விதமான சாதங்களை கொடுத்து வளைகாப்பு நடத்தி
வாழ்த்தினார்கள்.  காவல் நிலையத்தில் பெண் போலீசுக்கு நடந்த வளைகாப்பு
நிகழ்ச்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.