பிடிபட்ட 15 அடி நீளமுள்ள பிரம்மாண்ட ராஜ நாகம்; சிலிர்க்க வைக்கும் வைரல் வீடியோ!

காரில் கண்டெடுக்கப்பட்ட ராஜ நாகம் மீட்கப்பட்டு காட்டுக்குள் விடப்பட்ட காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது வைரலான இந்த வீடியோவை ஐஎஃப்எஸ் அதிகாரி சுசாந்தா நந்தா ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். கிளிப்பில்,  காரில் பாம்பு மறைந்திருப்பதைக்…

காரில் கண்டெடுக்கப்பட்ட ராஜ நாகம் மீட்கப்பட்டு காட்டுக்குள் விடப்பட்ட காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

தற்போது வைரலான இந்த வீடியோவை ஐஎஃப்எஸ் அதிகாரி சுசாந்தா நந்தா ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். கிளிப்பில்,  காரில் பாம்பு மறைந்திருப்பதைக் காணலாம். பாம்பு பிடிப்பவர் வரவழைக்கப்பட்டு ராஜ நாகத்தை மீட்க முயன்றனர்.

அவர் திறமையாக  15 அடி நீளமுள்ள ராஜ நாகத்தை பிடித்து ஒரு பையில் கொண்டு சென்றார். இதையடுத்து அந்த நபர் பாம்பை காட்டுக்குள் விட்டார்.

“இயற்கையின் சமநிலையைப் பேணுவதற்கு உணவுச் சங்கிலியில் அரச நாகப்பாம்புகள் இன்றியமையாதவை. இங்கு கிட்டத்தட்ட 15 அடி நீளமுள்ள ஒன்று மீட்கப்பட்டு காட்டுக்குள் விடப்பட்டுள்ளது. முழு நடவடிக்கையும் பயிற்சி பெற்ற பாம்பு பிடிப்பவர்களால் மேற்கொள்ளப்படுகிறது.  தயவு செய்து சொந்தமாக முயற்சி செய்யாதீர்கள். என்று பதிவின் தலைப்பு காண்போரை எச்சரித்துள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.