நாடு முழுவதும் இன்று இளநிலை நீட் தேர்வு; மோதிரம், வளையல், காதணிகள் அணிந்து செல்ல தடை…

நாடு முழுவதும் இன்று பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு நடைபெறவுள்ளது. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவப் படிப்புகளில் சேர நீட் நுழைவுத்…

நாடு முழுவதும் இன்று பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு நடைபெறவுள்ளது.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவப் படிப்புகளில் சேர நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று இருப்பது அவசியம். அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளாக நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது

அதன்படி 2023-24-ம் கல்வியாண்டு சேர்க்கைக்கான நீட் தேர்வு இன்று மதியம் 2 முதல் 5.20 மணி வரை நேரடி முறையில் நடைபெறவுள்ளது. இந்த தேர்வுக்கான இணையதள விண்ணப்பப்பதிவு கடந்த மார்ச் 6-ல் தொடங்கி ஏப்ரல் 15-ம் தேதி வரை நடைபெற்றது. நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் தேர்வினை எழுத 20 லட்சத்து 87 ஆயிரத்து 445 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

கடந்த ஆண்டைவிட 2 லட்சத்து 57 ஆயிரம் மாணவர்கள் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர். 11 லட்சத்து 84 ஆயிரத்து 502 மாணவிகளும், ஒன்பது லட்சத்து 2 ஆயிரத்து 930 மாணவர்களும் நீட் தேர்வினை எழுத விண்ணப்பித்துள்ளனர்.

இதற்காக நாடு முழுவதும் 499 நகரங்களில் தேர்வு மைங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவுக்கு வெளியே வெளிநாடுகளில் 14 தேர்வு மையங்களை என்டிஏ அமைத்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.