14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த காதலன் தலைமறைவு! – ஜார்கண்ட்டில் பரபரப்பு!

ஜார்கண்ட்டில் 14 வயது சிறுமியை அவரின் காதலன், தனது நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நடந்தேரியுள்ளது ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில் 14 வயது சிறுமியை அவரின் காதலன், தனது…

ஜார்கண்ட்டில் 14 வயது சிறுமியை அவரின் காதலன், தனது நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நடந்தேரியுள்ளது

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில் 14 வயது சிறுமியை அவரின் காதலன், தனது நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாக மாநில தலைநகரம் ராஞ்சியிலிருந்து 160 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தன்சார் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக தன்சார் காவல்நிலைய பொறுப்பு அதிகாரி மனோஜ் பாண்டே, செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

பாதிக்கப்பட்ட சிறுமி தனது காதலன் தனது வீட்டுக்கு அழைத்ததால் வீட்டிற்குச் சென்றுள்ளார். காதலன் 18 வயது பூர்த்தியாகாதவர். அங்கு தனது இரு நண்பர்களுடன் சேர்ந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் அறையில் பூட்டி வைத்துவிட்டு மறுநாள் மாலையில் 5 நண்பர்களுடன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதையும் படியுங்கள் : டி20 உலகக்கோப்பை – அமெரிக்காவுக்கு எதிராக டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு!

அப்போது சிறுமியின் அழுகுரல் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்துள்ளனர். அப்போது காதலன் உள்பட 5 பேரும் தப்பியோடியதாகவும், சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாகவும் அங்கிருந்தவர்கள் கூறினார். வீட்டிற்கு அழைத்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதுடன் மட்டுமின்றி, அவர்களின் ஒருவன் வீடியோ பதிவும் செய்துள்ளதாகக் கூறிய அதிகாரி, காதலனின் வீட்டில் செல்போனை பறிமுதல் செய்துள்ளதாகவும் தெரிவித்தார். குழந்தைகள் நல வாரிய அறிவுறுத்தலின்படி பாதிக்கப்பட்ட சிறுமி பாதுகாப்புக்காக காப்பகத்திற்கு அனுப்பப்பட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.