நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுமி உயிரிழப்பு | #Tenkasi அருகே சோகம்…

தென்காசி அருகே பெற்றோர் கண் முன்னே நீச்சல் குளத்தில் மூழ்கி 9 வயது சிறுமிஉயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம், புளியங்குடி அருகே உள்ள நவாச்சாலை பகுதியில் நாராயணன்என்பவர் நீச்சல் குளம்…

9yearoldgirl,swimming pool,Tenkasi , parents , death , 9yearoldgirl,swimming pool,Tenkasi , parents , death ,

தென்காசி அருகே பெற்றோர் கண் முன்னே நீச்சல் குளத்தில் மூழ்கி 9 வயது சிறுமி
உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம், புளியங்குடி அருகே உள்ள நவாச்சாலை பகுதியில் நாராயணன்
என்பவர் நீச்சல் குளம் ஒன்றை கட்டி அதை வணிக ரீதியான பயன்பாட்டிற்கு
பயன்படுத்தி வருகிறார். தற்போது பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை
விடப்பட்டுள்ள நிலையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அந்த நீச்சல் குளத்தில்
நீச்சல் பயிற்சியும் வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த நீச்சல் குளத்திற்கு தனது குடும்பத்துடன் சென்ற ஹன்சிகா
(வயது 9) என்ற சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இந்நிலையில், இந்த சம்பவம்
குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற புளியங்குடி போலீசார் ஹன்சிகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி
வைத்தனர்.

இதையும் படியுங்கள் : AirShow2024 | கூட்ட நெரிசலில் சிக்கி திணறிய மக்கள் – உயிரிழப்பு 5 ஆக உயர்வு!

இந்த சம்பவம் தொடர்பாக புளியங்குடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நீச்சல் குளத்தின் உரிமையாளரான நாராயணன் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து, முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த சிறுமியான ஹன்சிகா நீச்சல்
குளத்தில் பந்து விளையாடிக் கொண்டிருந்ததாகவும், அப்போது, அவர் நீரில்
மூழ்காமல் இருக்க பயன்படுத்திய டியூப்பை பயன்படுத்த தெரியாத காரணத்தினால்
டியூப்பில் இருந்து அந்த சிறுமி நழுகி நீரில் மூழ்கியது தெரியவந்தது.இந்நிலையில்,9 வயது சிறுமி நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.