மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று பாதிப்பு இன்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்ற நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது தொற்று பாதிப்பு புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மாநிலம் முழுவதும் 57,640 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மறுபுறம் 920 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
மும்பையை பொறுத்த அளவில் 3,879 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 77 பேர் உயிரிழந்துள்ளனர். புனேவில் இந்த பாதிப்பு 9,084 ஆகவும், உயிரிழப்பு 93 ஆகவும் உள்ளது.

தற்போது மாநிலம் முழுவதும் 6.41 லட்சம் கொரோனா நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனர். முன்னதாக மும்பையை கவனத்தில் கொண்டு தேசிய தலைநகர் டெல்லிக்கு ஆக்சிஜன் சப்ளையை தடங்கலின்றி வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு சுட்டிக்காட்டியிருந்தது. இந்த நிலையில் மேற்குறிப்பிட்ட உயிரிழப்புகளை மகாராஷ்டிரா பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மாநிலத்தின் ஒட்டுமொத்த பாதிப்பில் 6.6 லட்சம் பாதிப்புகள் 15 மாவட்டங்களிலிருந்து பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இம்மாவட்டங்கள் தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோப் தெரிவித்துள்ளார்.