‘மருத்துவ மாணவர் சேர்க்கையில் 812 இடங்கள் காலியாக உள்ளது’ – அமைச்சர் தகவல்

தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கையில், 812 இடங்கள் காலியாக உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் “ஹீமோபீலியா” தினவிழாவில் பங்கேற்ற மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், புதிய மருத்துவமனை கட்டடங்களின்…

தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கையில், 812 இடங்கள் காலியாக உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் “ஹீமோபீலியா” தினவிழாவில் பங்கேற்ற மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், புதிய மருத்துவமனை கட்டடங்களின் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அனைத்து அரசு மருத்துவ கல்லூரி மருத்துமனைகளிலும், ஹீமோபீலியாவிற்கு தடுப்பூசி கிடைக்கும் வகையில், மானிய கோரிக்கையில் அறிவிக்கப்படும் எனவும், இதற்கான கட்டமைப்பு உருவாக்கபடும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், தமிழகத்தில் 100% மருத்துவ இடங்கள் நிரப்பப்பட்டு விட்டது எனவும், மத்திய அரசுதான் 812 இடங்களை நிரப்ப வேண்டும் எனவும் அவர் கூறினார். ஆனால், விண்ணப்பிப்பதற்கான காலம் முடிவடைந்துவிட்ட நிலையில் 24 இடங்களை மத்திய அரசு நிரப்பவில்லை எனவும், அவற்றை நிரப்ப தமிழக அரசு வலியுறுத்தியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அண்மைச் செய்தி: மங்கலதேவி கண்ணகி கோயிலில் சித்திரை முழுநிலவு விழா

தொடர்ந்து பேசிய அவர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளை அரசு மருத்துவமனைகளிலேயே போடும் வகையில் மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.