“7வது ஆம்புலன்ஸ் என் குழந்தைகளுக்காக” – அனிமல் ஆம்புலன்ஸ் வழங்கிய நடிகர் பாலா!

நகைச்சுவை நடிகர் பாலா அனிமல் ஆம்புலன்ஸை வழங்கியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நகைச்சுவை நடிகர் பாலா. தொடர்ந்து இவர் நாய் சேகர், Friendship உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்தாண்டு ராகவா லாரண்ஸ் தன்னை திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகம் செய்யவுள்ளார் என்று கூறியிருந்தார். அதன் பின்பு இது குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை.

இதனிடையே தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு தன்னால் இயன்ற உதவியைச் செய்து வருகிறார். குறிப்பாக மருத்துவ சிகிச்சைக்கு ஆம்புலன்ஸ் இன்றி தவிக்கும் மலைவாழ் பகுதி மக்களுக்கு இலவசமாக ஆம்புலன்ஸ் வழங்கி இருந்தார். அந்த வகையில் கடைசியாக சுமார் 1000 குடும்பங்கள் வசிக்கும் கிடாரி மலை கிராமம் என்ற பகுதிக்கு தனது 6வது ஆம்புலன்ஸை வழங்கினார்.

இந்த நிலையில் பாலா, விலங்குகளின் மருத்துவ சிகிச்சைக்காக “அனிமல் ஆம்புலன்ஸ்” என்ற பெயரில் இலவச ஆம்புலன்ஸை  வழங்கியுள்ளார்.  இது தொடர்பாக அவர்  வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், “என்னுடைய 7வது ஆம்புலன்ஸ் என் அன்பான குழந்தைகளுக்காக” என்று குறிபிட்டதோடு வீடியோ ஒன்றை பகிந்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.