தமிழகம்

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க 20.62 லட்சம் பேர் விண்ணப்பம்!

வாக்காளர் சிறப்பு முகாம்களில் 29 லட்சத்து 72 ஆயிரத்து 899 பேர் விண்ணப்பித்துள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் மேற்கொள்ள சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. அதில் நேற்று வரை 29 லட்சத்து 72 ஆயிரத்து 899 பேர் விண்ணப்பித்துள்ளதாக சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், ஒரு சட்டமன்ற தொகுதியில் இருந்து வேறு சட்டமன்ற தொகுதிக்கு இடம்பெயரவும் 20 லட்சத்து 62 ஆயிரத்து 424 பேர் விண்ணப்பித்துள்ளனர். வாக்காளர் பட்டியலில் இருந்து பெயரை நீக்க 3 லட்சத்து 99 ஆயிரத்து 31 பேரும், திருத்தம் மேற்கொள்ள 3 லட்சத்து 27 ஆயிரத்து 991 பேரும் விண்ணப்பித்துள்ளனர். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வெளிநாடு வாழ் இந்தியர்கள் 200 பேர் விண்ணப்பித்துள்ளதாகவும் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

காலியாகவுள்ள கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என சாஹூ தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஹோட்டலில் உபசரிப்பு சரிவர இல்லாததால் ஊழியர்களுக்கு அரிவாள் வெட்டு!

Jayapriya

வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்த இருவர் மீது வழக்குபதிவு

EZHILARASAN D

திமுக எம்.பி கனிமொழி வீடு திரும்பினார்!

Gayathri Venkatesan

Leave a Reply