74வது குடியரசு தினத்தை முன்னிட்டு கூகுள் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது.
நாட்டின் 74-வது குடியரசு தின விழா நாடுமுழுவதும் இன்று வெகுவிமரிசையுடன், கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்திய அரசு சார்பில் குடியரசு தின விழா ஆண்டுதோறும் டெல்லியில் உள்ள ராஜபாதையில் மிக சிறப்பாக கொண்டாடப்படும்.
இதையொட்டி நேற்று இரவு நாட்டில் உள்ள பாரம்பரிய கட்டடங்கள், அரசின் முக்கிய அலுவலகங்கள் மூவர்ண கொடியில் ஒளிர்ந்தன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இணைய தேடு பொறியில் முதன்மை நிறுவனமான கூகுள் விழாக்காலங்களில் அதன் தேடு பொறியில் புதிய டூலை மாற்றியமைக்கும். தனது டூடுல் அமைப்பை அந்த நாளின் சிறப்புக்கு ஏற்றார் போல் மாற்றி அமைத்து வருகின்றது. அண்மையில் இந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது புதிய தேடு பொறியை மாற்றியது என்பது குறிப்பிட்டத்தக்கது.
அந்த வகையில் உலகின் மிக பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் குடியரசு தின விழாவினை பிரதிபலிக்கும் வைகயில் கூகுள் நிறுவனம் தனது டூடுல் அமைப்பை மாற்றி உள்ளது. அதில் குடியரசு தின அணிவகுப்பின் பல்வேறு கூறுகள் இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி மாளிகை, இந்தியா கேட், மோட்டார் சைக்கிள் சாகசம் உள்ளிட்டவை சிக்கலான கையால் வெட்டப்பட்ட காகிதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது போல் இடம்பெற்றுள்ளது.