மதுரை கொரோனா பாதிப்பு எதிரொலி… உடன் பயணித்த 70 பேருக்கும் பரிசோதனை

சீனாவிலிருந்து மதுரை வந்த 2 பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து உடன் பயணித்த 70 பேருக்கும் பரிசோதனை மேற்கொள்ளபட உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சீனா, ஜப்பான், அமெரிக்கா, தென்கொரியா உள்ளிட்ட…

சீனாவிலிருந்து மதுரை வந்த 2 பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து உடன் பயணித்த 70 பேருக்கும் பரிசோதனை மேற்கொள்ளபட உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சீனா, ஜப்பான், அமெரிக்கா, தென்கொரியா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நாடுகளில் உருமாற்றமடைந்த பிஎஃப் வகை கொரோனா தொற்று பரவி வருகிறது. இதையடுத்து அனைத்து சர்வதேச விமானநிலையங்களிலும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கடந்த 3 தினங்களில் 39 சர்வதேச பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், சீனாவில் இருந்து மதுரை வந்த 2 பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து கூறிய சுகாதாரத்துறை அதிகாரிகள், இலங்கையிலிருந்து நேற்று காலை மதுரை வந்த விமானத்தில் 72 பயணிகள் வந்தனர். அவர்களில் 15 பேருக்கு ரேண்டம் முறையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில் 2 பேருக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

விசாரணையில் சீனாவிலிருந்து இலங்கை வழியாக மதுரை வந்த 39 வயது பெண் மற்றும் 5 வயது குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவருடன் பயணித்த 15 வயது சிறுமிக்கு கொரோனா இல்லை. இது உருமாற்றம் அடைந்த கொரோனா வைரசா? என்பதை கண்டறிய மரபணு பரிசோதனைக்கு அனுப்பட்டுள்ளது. அக்கிராம மக்களை சந்தித்து பதட்டபட வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அவர்களுடன் பயணித்த 70 பேருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.