திருப்பதியில் 7 கிலோ மீட்டர் நீண்ட வரிசை : 32 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்யும் பக்தர்கள்!

தொடர் விடுமுறை காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 7 கிலோ மீட்டர் வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் சுமார் 32 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். மிலாடி நபி, காந்தி ஜெயந்தி, புரட்டாசி…

தொடர் விடுமுறை காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 7 கிலோ மீட்டர் வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் சுமார் 32 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

மிலாடி நபி, காந்தி ஜெயந்தி, புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமை உள்ளிட்ட தொடர் விடுமுறை காரணமாக ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கும், சுற்றுலாவுக்கும் சென்றுள்ளனர். இதனையடுத்து திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. சுமார் 32 மணி காத்திருந்து பக்தர்கள் இலவச தரிசனம் செய்து வருகின்றனர்.

சுமார் 7 கிலோ மீட்டர் நீளத்திற்கு நீண்ட வரிசை காணப்படுகிறது. திருப்பதி மலையில் உள்ள தங்கும் அறைகள் அனைத்தும் நிரம்பி வழிகிறது.எனவே ஏராளமான பக்தர்கள் தங்குவதற்கு அறைகள் கிடைக்காமல் மண்டபங்கள், சொந்த வாகனங்கள், கிடைத்த இடங்களில் தங்கி உள்ளனர்.பார்க்கிங் பகுதிகள் முழுவதும் வாகனங்கள் நிரம்பி உள்ளன. இந்த நிலை அடுத்த இரண்டு நாட்கள் நீடிக்கும் என்று கருதப்படுகிறது.

பக்தர்கள் வருகை அதிகரித்துள்ள காரணத்தால் வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் ஆகியவை உள்ளிட்ட அடிப்படை ஏற்பாடுகளை தேவஸ்தான நிர்வாகம் செய்து கொடுத்து வருகிறது. இதேபோல் கட்டண தரிசன வரிசைகளிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.