முக்கியச் செய்திகள் தமிழகம்

ஏடிஎம் கொள்ளையனுக்கு 7 நாள் போலீஸ் காவல்

ஏடிஎம் கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் சவுக்கத் அலிக்கு ஏழு நாள் போலீஸ் காவல் அளித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் எஸ்பிஐ ஏடிஎம் மையங்களில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காவல்துறையினர் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வந்த நிலையில் ஏ.டி.எம் கொள்ளையில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும், சவுக்கத் அலியை ஹரியானாவில் கைது செய்து சென்னை அழைத்து வந்தனர்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சவுக்கத் அலி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் சவுக்கத் அலியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில் சவுக்கத் அலியை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. எஸ்.பி.ஐ ஏடிஎம் கொள்ளை சம்பவம் குறித்த ஒட்டுமொத்த தகவல்களையும் திரட்ட காவல்துறையினர் முடிவு செய்திருப்பதால் இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement:
SHARE

Related posts

எழுவர் விடுதலையில் முடிவெடுக்க அதிகாரம் இல்லை என கூற ஆளுநர் இவ்வளவு காலம் எடுத்துக் கொண்டது ஏன்? – சீமான் கேள்வி

Nandhakumar

தமிழக சுகாதாரச் செயலர் மத்திய சுகாதாரத்துறையுடன் ஆலோசனை!

இந்தியாவில் குறைந்த கொரோனா பாதிப்பு

Ezhilarasan