60 வயது கூலித் தொழிலாளியை மாடலாக மாற்றி புகைப்படம் எடுத்து இன்ஸ்டாவில் வெளியிட்ட போட்டோகிராபரின் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கேரளாவின் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் மம்மிக்கா(60). இவர் தனது அன்றாட வாழ்க்கை தேவையை பூர்த்தி செய்துகொள்ள கூலித் தொழில் செய்து வருகிறார். கூலித் தொழிலாளிக்கே உரித்தானதாக பாணியில் லுங்கி, சட்டையுடன் இருப்பவர்தான் மம்மிக்கா. இந்த நிலையில் தினசரி வேலையில் ஈடுபட்ட இவரைப் பார்த்த போட்டோகிராபர் சரீக், மம்மிக்காவை போட்டோ எடுத்துள்ளார். மேலும் தான் வைத்துள்ள போட்டோ கம்பெனிக்கு ஒரு மாடலிங் செய்யவும் கேட்டுக்கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து ஷரீக்கின் கோரிக்கையை ஏற்ற மம்மிக்கா மாடலிங் செய்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அழுக்கு சட்டையுடனும், லுங்கியுடனும் இருந்த அவரை முழுவதுமாக மாற்றியுள்ளார் ஷ்ரீக். கோட் – சூட், கண்ணாடி, புது ஹேர் ஸ்டைல் என மம்மிக்காவை ஒட்டுமொத்தமாக மாற்றிய ஷரீக் போட்டோ ஷூட் நடத்தியதுடன், அதனை வீடியோவாகவும் எடுத்துள்ளார். வயல்வெளியில் வேலை செய்துகொண்டிருந்த இருந்த மம்மிக்காவின் புகைப்படங்களை பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்த போட்டோகிராபர், பின்பு மாடலிங் தொடர்பாக எடுத்த வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோவில் கூலித்தொழிலாளி போன்ற தோற்றத்தை மாற்றி மாபெரும் மாடலாக உருமாறியுள்ளார் மம்மிக்கா. இன்ஸ்டாகிராமில் வெளியான இந்த வீடியோ பலராலும் பகிரப்பட்டு அதிகப்படியான லைக்குகளையும், கமெண்டுகளையும் பெற்றுவருகிறது. 60 வயது கூலித்தொழிலாளியின் இந்த அசத்தல் லுக்தான் தற்போது இணையத்தையே ஆக்கிரமித்து வருகிறது.