5வது டி20 போட்டி: இந்தியா – இங்கிலாந்து அணிகள் இன்று மோதல்

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 -வது டி 20 போட்டி இன்று நடைபெறுகிறது.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் அடுத்த மூன்று போட்டிகளில் இந்திய அணி தோல்வியுற்றது.

கடைசியாக நடைபெற்ற 4 ஆவது டி 20 போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 3 – 0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 5 -வது டி 20 போட்டி இன்று நடைபெறுகிறது. சௌத்தாம்ப்டனில் நடைபெறும் இப்போட்டி இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

இந்திய அணி தொடரின் கடைசி போட்டியிலாவது ஆறுதல் வெற்றி பெற வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.