பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்!

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா வயது முதிர்வு காரணமாக இன்று காலமானார்.

பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா(90) இன்று காலமானார். சாலமன் பாப்பையாவுக்கு உடல் நல குறைவு காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் உடனடியாக மதுரை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சாலமன் பாப்பையா இன்று காலமானார்.

1936-ஆம் ஆண்டு பிறந்த இவர், தமிழ்ப் பட்டிமன்றங்களை உலகம் முழுவதும் வாழும் தமிழர்களிடையே கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர். தனது பாமரத்தனமான நகைச்சுவை, எளிய தமிழ் மற்றும் அனுபவமிக்க நடுவர் திறமையால் பல தலைமுறை மக்களைக் கவர்ந்தவர். கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றி, தமிழ்த் தொண்டாற்றிய இவர், பல தமிழ் நூல்களையும், உரைகளையும் எழுதியுள்ளார். இவரது மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கும், பட்டிமன்றக் கலைக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரது மறைவுக்குப் பல்துறைச் சார்ந்த பிரபலங்களும், தமிழார்வலர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.