முக்கியச் செய்திகள் தொழில்நுட்பம்

5ஜி ஆதரவுடன் புதிய ஸ்மார்ட்போன்!

2ஜி, 3ஜி, 4ஜி வரிசையில் தற்போது 5ஜி கோபுரங்கள் பொருத்துவதற்கு மத்திய அரசு  ஆர்வம் காட்டி வருகிறது. புதுபுதுத் தொழில்நுட்பங்கள் நாள்தோறும் வந்துகொண்டிருக்கின்றன.

அதற்கு ஏற்ப 5ஜி சாதனங்களையும் பல ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் ரியல்மி நிறுவனம் புதிய 5ஜி ரக ஸ்மார்ட்போனை இன்று வெளியிட்டது. ரியல்மி நார்ஸோ 50 5ஜி என பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் இந்தியா முழுவதும் இன்று விற்பனைக்கு வெளிவந்துள்ளது. சிறந்த திரை வசதியுடன், மீடியாடெக் டைமன்சிட்டி புராசசரைக் கொண்டுள்ளது. 5000mAh பேட்டரி திறன் கொண்டிருக்கும் இந்த போனில், ஃபிங்கர்பிரிண்ட் சென்சர் வசதியும் இணைக்கப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

4ஜிபி+64ஜிபி, 4ஜிபி+128ஜிபி, 6ஜிபி+128ஜிபி ஆகிய 3 வகைகளில் இந்த போன் கிடைக்கிறது. அடிப்படை விலை ரூ.15,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 4ஜிபி+128ஜிபி போனின் விலை ரூ.16,999க்கும், 6ஜிபி+128ஜிபி வெர்ஷன் ரூ.17,999க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்தப் போன் 6.6 இன்ச் முழு எச்டி+ஐபிஎஸ் எல்சிடி திரை கொண்டது. 2408×1080 ரிசொல்யூஷனுடன், 600 nits பிரைட்னஸ் லெவல் உள்ளது. ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தில் இந்த ஸ்மார்ட்போன் இயங்கும்.
இந்த வகை ஸ்மார்ட்போன்களில் இரண்டு பின்புற கேமரா உள்ளது. 18எம்பி பிரைமரி சென்சார், 2 எம்பி மைக்ரோ சென்சார் உடன் எல்இடி ஃபிளாஷும் இந்த போனில் உள்ளது.
8எம்பி உடன் செல்ஃபி கேமரா இருக்கிறது. ஹைப்பர் பிளாக், ஹைப்பர் புளூ வண்ணத்தில் இந்த போன்கள் விற்பனைக்குக் கிடைக்கிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

எல்ஐசி பங்குகள் விற்பனைக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

Saravana Kumar

ஊழல் ஆட்சிக்கு முடிவு கட்ட மக்கள் முடிவெடுத்து விட்டனர்: ஸ்டாலின்

Ezhilarasan

மாற்று வீடுகள், நிவாரணம் வழங்கப்படும் – முதலமைச்சர்

Saravana Kumar