5ஜி சேவை; பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்

டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் 5ஜி சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தின் போது, 5ஜி அலைக்கற்றையை ஏலத்தில் விடுவதற்கு பிரதமர் மோடி தலைமையிலான…

டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் 5ஜி சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தின் போது, 5ஜி அலைக்கற்றையை ஏலத்தில் விடுவதற்கு பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

இதையடுத்து மொத்தம் 72097.85 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றை ஏலத்தில் விடப்பட்டது. இது 20 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்த ஏலத்தில், ஜியோ, ஏர்டெல், வோடபோன்-ஐடியா, அதானி நிறுவனம் ஆகியவை ஏலம் எடுத்தன. மொத்தம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கோடி மதிப்புள்ள அலைக்கற்றைகள் ஏலம் போனது.

இந்தநிலையில், நாட்டில் 5ஜி சேவை இன்று தொடங்குகிறது. டெல்லி பிரகதி மைதானத்தில் நடக்கும் நிகழ்ச்சியில், 5ஜி சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். முதலில், குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டும் 5ஜி சேவை அமலுக்கு வருகிறது. 2 ஆண்டுகளுக்குள் படிப்படியாக நாடு முழுவதும் அமலுக்கு வரும் என்று தெரிகிறது.

4ஜி சேவையை விட பல மடங்கு வேகத்தில் வீடியோக்களை பதிவிறக்கம் செய்ய 5ஜி சேவை உதவும். அதே நிகழ்ச்சியில், இந்திய மொபைல் காங்கிரசின் 4 நாள் மாநாட்டையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.