முக்கியச் செய்திகள் தமிழகம்

பயன்படுத்த முடியாத நிலையில் 5,583 பள்ளிக் கட்டிடங்கள்-தமிழக அரசு

தமிழகத்தில் 5,583 பள்ளி கட்டிடங்கள் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மதுரையைச் சேர்ந்த சமூக நல ஆர்வலர் செந்தில் முருகன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணா பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அப்போது தமிழக அரசு சார்பில், “2021-2022 ஆண்டும் தமிழகத்தில் 2,553 சேதமடைந்த பள்ளிக் கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டுள்ளது. 2022-2023 ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டு 3030 சேதமடைந்த பள்ளி கட்டிடங்கள் அகற்றப்பட உள்ளது.

ரூ.3,745.28 கோடி செலவில் 6,941 பள்ளிகளுக்கு 40,043 வகுப்பறைகள், 3,146 அறிவியல் ஆய்வகங்கள், 10,470 கழிப்பறைகள், 5,421 குடிநீர் வசதிகள், 8,28,387 மீட்டர் சுற்றுச் சுவர் ஆகியவை செயல்படுத்தப்பட்டுள்ளது.

ரூ.106.78 கோடி செலவில் 2,695 பள்ளிகளில் 32 வகுப்பறைகள், 2 ஆய்வகங்கள், 436 கழிவறைகள், 2,270 பள்ளிகளுக்கு குடிநீர் வசதிகள் செய்யப்பட்டு வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மோசமான நிலையில் உள்ள பழைய பள்ளி கட்டிடங்களை இடித்து புதிய கட்டிடம் கட்ட குழு அமைக்க கோரிய வழக்கை முடித்து வைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

செல்லப்பிராணிகளை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்…

G SaravanaKumar

ரோஹித், தினேஷ் அதிரடி.. இந்திய அணி அபார வெற்றி..!

Web Editor

200 கோடி தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை-யுனிசெஃப் அமைப்பு வாழ்த்து

Web Editor