டிஸ்னியிடம் கொடுக்கப்பட்ட இளவரசர் ஹாரி ஆவணப்படம்!

இளவரசர் ஹாரி பற்றிய ஆவணப்படம் நெட்பிளிக்ஸ் நிறுவனத்திடம் தராமல் டிஸ்னி நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது.  இங்கிலாந்தில் 2-ம் எலிசபெத் ராணி,  கடந்த 2022 இல் உயிரிழந்ததை அடுத்து,  அவரது மகனான மூன்றாம் சார்லஸ் 2023-ம் ஆண்டு…

இளவரசர் ஹாரி பற்றிய ஆவணப்படம் நெட்பிளிக்ஸ் நிறுவனத்திடம் தராமல் டிஸ்னி நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது. 

இங்கிலாந்தில் 2-ம் எலிசபெத் ராணி,  கடந்த 2022 இல் உயிரிழந்ததை அடுத்து,  அவரது மகனான மூன்றாம் சார்லஸ் 2023-ம் ஆண்டு மன்னராக பொறுப்பேற்றுக் கொண்டார்.  75 வயதாகும் அவருக்கு,  புற்றுநோய் இருப்பதாகவும்,  மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில்,  மன்னர் சார்லஸுக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பதை அறிந்ததும் உடனடியாக அவரது மகன் இளவரசர் ஹாரி லண்டன் திரும்பினார்.  அங்கு கிளாரன்ஸ் ஹவுசில் தங்கியிருந்த ஹாரியை,  மன்னர் சார்லஸ்,  அரசி கமிலா ஆகியோர் தனியாக சந்தித்துப் பேசினர்.

இதைத்தொடர்ந்து அரச குடும்பத்தில் இணைய ஹாரி முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியது.  அரச குடும்பத்திற்கு மீண்டும் திரும்பி,  பணிகளை முன்னெடுக்கவும், நோயால் பாதிக்கப்பட்டுள்ள தந்தைக்கு உதவவும் இளவரசர் ஹாரி ஆசைப்படுவதாக அரணமனை வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியது.

இதனிடையே இளவரசர் ஹாரி மற்றும் நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு 5 வருட ஒப்பந்தம் இருந்த நிலையிலும் இளவரசர் ஹாரி பற்றிய ஆவணப்படம் நெட்பிளிக்ஸ் நிறுவனத்திடம் தராமல் டிஸ்னி நிறுவனத்திடம் கொடுக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.