5 இலங்கைத் தமிழர்கள் ராமேஸ்வரத்தில் தஞ்சம்

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் மேலும் 5 இலங்கைத் தமிழர்கள் ராமேஸ்வரத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் உணவு, மருந்துகள் போன்ற அத்தியாவசிய…

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் மேலும் 5 இலங்கைத் தமிழர்கள் ராமேஸ்வரத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் உணவு, மருந்துகள் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்காக கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால் ஆளும் அரசுக்கு எதிராக வீதிகளில் இறங்கி மக்கள் போரட்டம் நடத்தி வருகின்றனர்.

மேலும் உணவுப் பஞ்சம் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் இலங்கை தமிழர்கள் இந்திய இலங்கை சர்வதேச கடல் எல்லையில் உள்ள தீவிர கண்காணிப்பையும் மீறி பைப்பர் படகுகளில் தனுஷ்கோடிக்கு அகதிகளாக தஞ்சம் அடைந்து வருகின்றனர். படகு ஒன்றிற்கு 2 லட்சம் 3 லட்சம் என அதிக தொகை செலுத்த உள்ளதால் போதிய வருமானம் இல்லாமல் அங்கேயே ஏராளமான தமிழர்கள் தவித்து வருகின்றனர். மேலும் ஒரு சில பேர் தமிழகம் வர முற்படும் போது இலங்கை கடற்படை மற்றும் ராணுவத்திடம் மாட்டிக் கொள்கின்றனர்.

இந்நிலையில் நேற்று இரவு வவுனியா கடற்கரையில் இருந்து ஒரு பைபர் படகில் கிளம்பி தயாளன், லதா, டன்சிகா, ராஜலக்ஷ்மி, 2 மாத கை குழந்தை தக்டரா உட்பட 1 குடும்பத்தை சேர்ந்த 5 இலங்கை தமிழர்கள் இன்று அதிகாலை 3 மணி அளவில் இராமேஸ்வரம் அடுத்த சேராங்கோட்டை கடற்கரையில் வந்து இறங்கினர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ராமேஸ்வரம் கடற்படை போலீசார் இலங்கை தமிழர்களை மீட்டு மண்டபம் கடற்படை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 2 மாதங்களில் 22 குடும்பங்களை சேர்ந்த 80 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழ்நாடு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.