44-வது செஸ் ஒலிம்பியாட்; ஆவின் பால் பாக்கெட்டுகளில் “தம்பி”

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் சின்னமான, “தம்பி” ஆவின் பால் பாக்கெட்டுகளில் இடம்பெற்றுள்ளது. 44-வது செஸ் ஒலிம்பியாட் – 2022 போட்டி குறித்து விளம்பரம் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் செஸ் ஒலிம்பியாட் குறித்த…

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் சின்னமான, “தம்பி” ஆவின் பால் பாக்கெட்டுகளில் இடம்பெற்றுள்ளது.

44-வது செஸ் ஒலிம்பியாட் – 2022 போட்டி குறித்து விளம்பரம் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் செஸ் ஒலிம்பியாட் குறித்த வாசகங்கள் பொறிக்கப்பட்ட பேருந்துகளைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்திய வரலாற்றில் முதன் முறையாகத் தமிழ்நாட்டில் 44-வது செஸ் ஒலிம்பியாட் – 2022 போட்டி சரித்திர புகழ் வாய்ந்த மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது.

இப்போட்டியானது 28.7.2022 முதல் 10.8.2022 வரை நடைபெறவுள்ளது. இப்போட்டியில் சர்வதேச அளவில் 186 நாடுகளைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட சதுரங்க விளையாட்டு வீரர் / வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சர் ஜூன் 9ம் தேதி பெருநகர சென்னை மாநகராட்சியின் ரிப்பன் கட்டிட வளாகத்தில், 44-வது செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டிக்கான இலச்சினை மற்றும் சின்னத்தை அறிமுகப்படுத்தினார்.

அண்மைச் செய்தி: ‘செஸ் ஒலிம்பியாட்; சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு 1 நாள் உள்ளூர் விடுமுறை’

அதனைத் தொடர்ந்து பல்வேறு வகைகளில், 44-வது செஸ் ஒலிம்பியாட் குறித்து விளம்பரம் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் பேருந்து நிறுத்தம், மக்கள் அதிகம் கூடம் இடம் என அனைத்து இடங்களிலும், ஓவியங்கள், வடிவமைப்புகள் எனப் பல வகையில் வடிவமைக்கப்பட்டு வருகின்றது தமிழ்நாடு அரசு. அதன் தொடர்ச்சியாக இன்று, ஆவின் பால் பாக்கெட்டில், ‘நம்ம சென்னை – நம்ம செஸ்’ என்ற வாசகத்தோடு ‘தம்பி’ சின்னமும் இடம்பெற்றுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.