4000 திருக்கோயில் குடமுழுக்குகள் : மதவாத அரசியல் செய்வோர்க்குத் தமிழ்நாட்டில் இடமில்லை – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிவு…….!

மதவாத அரசியல் செய்வோர்க்கு தமிழ் நாட்டில் இடமில்லை என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

“ஆட்சிக்கு வந்த 1728 நாட்களில் 4000 திருக்கோயில் குடமுழுக்குகள்

ஆயிரமாவது குடமுழுக்கு – மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் திருக்கோயில் (2023)

2 ஆயிரமாவது குடமுழுக்கு – மயிலாடுதுறை – கீழப்பரசலூர் வீரட்டேஸ்வரர் திருக்கோயில் (2024)

3 ஆயிரமாவது குடமுழுக்கு – நாகை – திருப்புகலூர் அக்னீஸ்வரர் திருக்கோயில் (2025)

4 ஆயிரமாவது குடமுழுக்கு – இன்று, பெரம்பூர் சேமாத்தம்மன் திருக்கோயிலில்…

இதுவரை இப்படி ஒரு சாதனை தமிழ்நாட்டின் வரலாற்றில் இல்லை. மதவாத அரசியல் செய்வோர்க்குத் தமிழ்நாட்டில் இடமில்லை”

என்று தெரிவித்துள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.