ரஷ்ய பெட்ரோல் நிலையத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35ஆக உயர்ந்துள்ளது.
ஷியாவின் தெற்கு பகுதியில் டகிஸ்டன் மாகாணம் உள்ளது. இதன் தலைநகர் மக்ஹச்கலா நகரில் உள்ள பெட்ரோல் பங்கில் நேற்று பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. பெட்ரோல் நிலையத்தின் அருகில் இருந்த கார் பழுது பாக்கும் கடையில் முதலில் தீப்பிடித்ததாகவும் பின்னர் பெட்ரோல் நிலையம் வெடித்து சிதறியதாகவும் கூறப்படுகிறது.
இந்த விபத்தில் பெட்ரோல் நிரப்ப சென்ற வாடிக்கையாளகள், ஊழியர்கள் உள்ளிட்ட 35 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 12 பேர் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து கும்டோர்கலின்ஸ்கி மாவட்டத்தில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இரங்கலை தெரிவித்துள்ளார். காயம் அடைந்தவர்கள் மேல் சிகிச்சைக்காக விமானம் மூலம் மாஸ்கோவிற்கு நகருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இநத விபத்தில் சதிச்செயல் ஏதும் உள்ளதா என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.







