பண்ணை வீட்டில் கிரிக்கெட் ஆடுகளமா? விராட் கோலி மறுப்பு!

பண்ணை வீட்டில் கிரிக்கெட் ஆடுகளம் அமைப்பதாக வெளியான செய்திகளுக்கு  விராட் கோலி மறுப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சில நாட்களுக்கு முனபு நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது. அதில் விராட் கோலியும் அவரது மனைவியும் இணைந்து…

பண்ணை வீட்டில் கிரிக்கெட் ஆடுகளம் அமைப்பதாக வெளியான செய்திகளுக்கு  விராட் கோலி மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சில நாட்களுக்கு முனபு நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது. அதில் விராட் கோலியும் அவரது மனைவியும் இணைந்து ஜிராட் என்ற பகுதியில் 8 ஏக்கர் நிலம் வாங்கியதாகவும், மேலும் இருவரும்  மும்பை கடற்கரை பகுதியான அலிபாக்  பண்ணை வீட்டில் கிரிக்கெட் ஆடுகளத்தை (பிட்ச்)உருவாக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியானது. இதுதொடர்பான கட்டுமான பணியை கோலி பார்வையிட்டதாகவும் தகவல்  வெளியானது.

இதனை கோலி திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதுதொடர்பாக இன்ஸ்டாகிராமில் அவர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில், நாம் சிறுவயதில் இருந்து படிக்கும் செய்தித்தாள் இந்த நாட்களில் போலி செய்திகளையும் வெளியிடுகிறது என தெரிவித்துள்ளார். கிரிக்கெட் ஆடுகளம் அமைக்கும் எந்த திட்டமும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.