3 வருடத்தில் போலீஸ் காவலில் 348 பேர் உயிரிழப்பு: மக்களவையில் தகவல்

நாட்டில், கடந்த 3 வருடத்தில் போலீஸ் காவலில் 348 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 1189 பேர் சித்தரவதைக்கு உள்ளானதாகவும் மக்களவையில் மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவையில் எழுத்து மூலம்…

நாட்டில், கடந்த 3 வருடத்தில் போலீஸ் காவலில் 348 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 1189 பேர் சித்தரவதைக்கு உள்ளானதாகவும் மக்களவையில் மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவையில் எழுத்து மூலம் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச் சர் நித்யானந்த் ராய் கூறியதாவது:

கடந்த 3 வருடங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் 348 பேர் போலீஸ் காவலில் உயிரி ழந்துள்ளனர். காவலில் இருந்தபோது 1189 பேர் கடும் சித்தரவதையை சந்தித்துள்ளனர்.

தேசிய மனித உரிமை ஆணையத்திடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், கடந்த 2018 ஆம் ஆண்டு போலீஸ் காவலில் 136 பேரும் 2019-ம் ஆண்டு 112 பேரும் 2020 ஆம் ஆண்டு 100 பேரும் உயிரிழந்துள்ளனர்.

போலீஸ் காவலில் இருந்தபோது 2018 ஆம் ஆண்டு 542 பேரும் 2019 ஆம் ஆண்டு 411 பேரும் 2020 ஆம் ஆண்டு 236 பேரும் சித்தரவதையை சந்தித்துள்ளனர் என்றும் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை 93 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சைபர் குற்றங்கள் நடந்துள்ளன. இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.