மதுரை ரயில் விபத்தில் நல்வாய்ப்பாக உயிர் தப்பிய 33 பயணிகள் விமானம் மூலம் இன்று டெல்லி செல்கின்றனர்.
மதுரை ரயில் நிலையத்தில், யார்டு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுற்றுலா ரயில் பெட்டியில் நேற்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து ஆன்மீக சுற்றுலா வந்த 63 பேரில், 20 பேர் படுகாயமடைந்த நிலையில் 9 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
இந்நிலையில், மதுரை ரயில் தீ விபத்தில் உடன் பயணித்த பயணிகள் 33 பேர் மதுரையில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்ல மதுரை விமான நிலையம் வந்தடைந்தனர்.
பலியானவர்களின் உடன் பயணித்த பயணிகள் 33 பேர் இன்று பகல் 02:30 மணியளவில் மதுரையில் இருந்து டெல்லி செல்லும் விமானம் மூலம் 28 பேர் புறப்பட்டு செல்கின்றனர். மீதமுள்ள 5 நபர்கள் பெங்களூர் விமான நிலையம் செல்கின்றனர்.
இவர்களுக்கான பயண ஏற்பாடுகளை தென்னக ரயில்வே மதுரை கோட்டம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த 33 பயணிகளும் டெல்லி சென்றபின் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.







