தொடர்ச்சியாக 300 ரன்கள்… டி20 வரலாற்றில் சாதனை படைத்த திலக் வர்மா!

டி20-யில் தொடர்ச்சியான போட்டிகளில் ஆட்டமிழக்காமல் 300 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை திலக் வர்மா படைத்துள்ளார். 

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்று விளையாடுகிறது.

முதல் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. அந்த போட்டியில் இங்கிலாந்து அணியை 132 ரன்னில் சுருட்டிய இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றது.

இதனையடுத்து இரண்டாவது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதிலும் இந்தியா வெற்றிப் பெற்றது. இதன்மூலம் டி20 தொடரில் இந்திய அணி 2-0 என முன்னிலை பெற்றுள்ளது. இப்போட்டியில் அபாரமாக விளையாடி இந்திய அணியை வெற்றி பெறவைத்த திலக் வர்மாவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

திலக் வர்மா 72 ரன்கள் அடித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்மூலம் டி20 வரலாற்றில் தொடர்ச்சியான போட்டிகளில் விக்கெட் இழக்காமல் 300 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை திலக் வர்மா படைத்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.