மாவட்டத்திற்கு 3 உயிரியல் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம், ஏற்காடு மலையடிவாரத்தில் குரும்பப்பட்டி வனஉயிரியல் பூங்கா
உள்ளது. இதை வனத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார். பூங்கா
முழுவதும் வனத் துறை அதிகாரிகளுடன் அமைச்சர் சென்று சுற்றி பார்த்து வேறு
என்னென்ன வசதிகள் செய்து தரவேண்டும் எனக் கேட்டறிந்தார். பின்னர், வனத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது,
இந்த ஆண்டு முதல் தமிழகத்தில் வனப்பரப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு
வருகிறது.Tamilnadu green mission திட்டத்தின் கீழ் 33 சதவீதம் உயர்த்த அரசு
நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவை மேம்படுத்த 8 கோடி ஒதுக்கீடு. 131.73
ஹெக்டேராக விரிவுப்படுத்தப்பட உள்ளது. கூடுதலாக வன உயிரினங்களை கொண்டுவர
நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கொரோனா காலத்திற்கு பிறகு தற்போது சுற்றுலா
பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. 24 வகையான உயிரினங்கள் தற்போது இங்கு உள்ளது.
புலி, சிறுத்தை, கரடி, நீர்பறவை உள்ளிட்டவை இந்த ஆண்டுக்குள் கொண்டுவரப்பட
உள்ளன. உயிரியல் பூங்காக்களை மேம்படுத்த மத்திய அரசு முன்வருவதில்லை. இருப்பினும் கல்விக்காகவே தமிழக அரசு உயிரியல் பூங்காக்களை மேம்படுத்தி வருகிறது.
மேலும் தமிழகத்தில் யானை மற்றும் புலி உள்ளிட்ட வன விலங்குகளின் எண்ணிக்கை
அதிகரித்துள்ளது. யானைகள் வனப் பகுதியை விட்டு வெளியேறுவதை தடுக்க நடவடிக்கை
எடுக்கப்பட்டு வருகிறது. வனப்பரப்பை அதிகரிக்கும்போது நிச்சயம் வனவிலங்குகள்
பொதுமக்கள் வசிப்பிடத்திற்கு வராது. மாவட்டத்திற்கு 3 உயிரியல் பூங்கா அமைக்க
நடவடிக்கை என்றும் கூறியுள்ளார். மேலும், பழங்குடியின மக்களின் பயன்பாட்டுக்காக மட்டுமே வனப் பகுதியில் தற்போது சாலைகள் போடப்படுகிறது. வனப் பகுதியில் ஆக்கிரமிப்பு இருந்தால் கட்டாயம் அகற்றப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
-ம.பவித்ரா







