முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

கொரோனா தடுப்பூசிக்கு பதில் ரேபிஸ் தடுப்பூசி! உ.பியில் அதிர்ச்சி சம்பவம்!!

உத்தரப் பிரதேசத்தில் கொரோனா தடுப்பூசிக்கு பதில் ரேபிஸ் நோய்க்கான தடுப்பூசி மூவருக்கு செலுத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 1.30 கோடியை கடந்துள்ள நிலையில், தற்போது தடுப்பூசி செலுத்தும் பணிகள் நாடு முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக உத்தரப் பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் 60 வயதை கடந்த மூவருக்கு கொரோனா தடுப்பூசிக்கு பதில் ரேபிஸ் நோய்க்கான தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

70 வயதை கடந்த இருவர் மற்றும் 60 வயதைக் கடந்த ஒரு பெண்மணி என மூன்று பெண்கள் அரசு மருத்துவமனையில் இன்று தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். ஆனால், அவர்கள் தடுப்பூசி செலுத்திய விவரங்களை ஆராய்ந்தபோது கொரோனா தடுப்பூசிக்கு பதில், ரேபிஸ் நோய்க்கான தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், இந்த தவறு மருந்தாளர்களால் ஏற்பட்டுள்ளது என்றும் மாவட்ட நீதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் அலுவலகத்திற்கு பரிந்துரைத்துள்ளதாகவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்ட மூவரில் ஒரு பெண்மணி, தான் தடுப்பூசி செலுத்திக்கொண்டு வீடு திரும்பிய பின்னர் லேசான மயக்கத்தை உணர்ந்ததாகவும், தடுப்பூசி செலுத்தப்படுவதற்கு முன்னர் ஆதார் அட்டை கேட்டகப்படவில்லை என்பது குறித்தும் மருத்துவமனை மீது சந்தேகப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

மூவரின் தடுப்பூசி செலுத்தப்பட்டதற்கான மருத்துவ ரசீதுகளை பரிசோதித்தபோது இந்த அலட்சிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தற்போது வரை உத்தரப் பிரதேசத்தில் 6,54,404 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 8,474 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Related posts

தடுப்பூசியால் பக்கவிளைவுகள் ஏற்படுகிறதா? – ராதாகிருஷ்ணன் பதில்

Niruban Chakkaaravarthi

ஓடிடியில் மாஸ்டர் திரைப்படம்!

Jayapriya

பாடகி ரிஹானாவை புகழும் ட்வீட்டுகளுக்கு லைக் செய்த ட்விட்டர் நிறுவனத் தலைவர் ஜாக் டோர்சே!

Jayapriya