திருவள்ளூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ வைத்திய வீரராகவ பெருமாள் கோயிலில் சித்திரை உற்சவம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னை சேலையூரில் உள்ள பாடசாலையில் இருந்து பாராயணம் படிப்பதற்காக வீரராகவ பெருமாள் கோயிலிற்கு நான்கு மாணவர்கள் வந்தனர்.
இதனையடுத்து வீரராகவர் கோயில் குளத்தில் சந்தியா வதனம் செய்ய குளத்தில் இறங்கிய போது ஒரு மாணவன் மூழ்கியுள்ளான். அந்த மாணவனை காப்பாற்ற மற்ற இரண்டு மாணவர்கள் முயற்சி செய்தனர். ஆனால் மூவரும் குளத்தில் மூழ்கி உயிரிழந்தனர்.
ஹரிஹரன் (17), வெங்கட்ரமணன் (19), வீரராகவன் (24) ஆகிய மூன்று பேர் குளத்தில் மூழ்கி உயிரிழந்தனர். தகவல் அறிந்த திருவள்ளூர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மூன்று பேரின் உடல்களை மீட்டனர்.








