உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இன்றையப் போட்டியில் இந்திய அணி முதல் இரண்டு ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்துள்ளது.
உலக கோப்பை தொடர் முழுவதும் இந்தியாவில் நடத்தப்படுகிறது. கடந்த 5 ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின .இதில் நியூசிலாந்து வெற்றி பெற்றது.
தொடரில் பங்கேற்றுள்ள மற்ற அணிகள் போட்டிக்கான கணக்கை தொடங்கி விட்ட நிலையில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் தங்களது முதல் போட்டியை இன்று விளையாடுகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் உலக கோப்பை தொடரின் 5வது லீக் போட்டி மதியம் 2 மணி அளவில் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.
போட்டியின் இந்தியா – ஆஸ்திரேலியா மோதும் முதல் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. ஆஸ்திரேலியா அணியின் இன்னிங்ஸை தொடக்க ஆட்டக்காரர்கள் டேவிட் வார்னர் மற்றும் மிட்ஷெல் மார்ஸ் தொடங்கினர். மூன்றாவது ஓவரின் இரண்டாவது பந்தில் மிட்ஷெல் மார்ஷ் தனது விக்கெட்டினை ரன் ஏதும் எடுக்காமல் பும்ரா பந்து வீச்சில் இழந்து வெளியேறினார்.
9 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டினை இழந்து 36 ரன்கள் சேர்த்து ஆஸ்திரேலிய அணி விளையாடியது. பின்னர் பவர்ப்ளே முடிவில் ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட்டினை இழந்து 43 ரன்கள், தொடர்ந்து 11 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டினை இழந்து 51 ரன்கள் என அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தது. 40 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. பின்னர் 43வது ஓவரில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் (15) விக்கெட்டை வீழ்த்தினார் பும்ரா.
பின்னர் 49.3 ஓவரில் ஆஸி. அணி 10 விக்கெட்டுகளையும் இழந்தது. 199 ரன்கள் மட்டுமே ஆஸி. அணி எடுத்திருந்தது. எனவே தற்போது இந்திய அணிக்கு 200 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷன் களமிறங்கினர். இஷான் கிஷன், மிட்செல் ஸ்டார்க் வீசிய ஓவரில் அவர் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.
இதனையடுத்து, இரண்டாவது ஓவரை ஜோஸ் ஹேசில்வுட் வீசினார். இந்த ஓவரில் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் 0 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். ஆஸ்திரேலிய அணியின் மிரட்டலான பந்துவீச்சில் இந்திய அணியின் வீரர்கள் இஷான் கிஷன், ரோஹித் சர்மா மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் 0 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறியது ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்தது.
2பின்னர் 3வது விக்கெட் 2 ரன்களிலேயே இழந்தது இந்தியா. ஸ்ரேயஸ் அய்யர் ஆட்டம் இழந்தார். 10 ஓவர்களில் 27 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் இழந்து விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் ஆட்டத்தில் உள்ளனர்.







