25.5 C
Chennai
September 24, 2023
தமிழகம் பக்தி

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் காணிக்கையாக ரூ.3.10 கோடி செலுத்திய பக்தர்கள்..!!

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 3.10 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவிலில் கோடை கால விடுறையை முன்னிட்டு நாள்தோறும்
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தமிழ்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதனால் கோயில் திருவிழாக்கோலம் பூண்டுள்ளது. இந்த நிலையில் மே மாத உண்டியல் காணிக்கை என்னும் பணி கோவில் காவடி பிறை
மண்டபத்தில் நடைபெற்றது.

திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், கோவில் இணை ஆணையர் கார்த்திக் முன்னிலையில் நடைபெற்ற காணிக்கை என்னும் பணியில், சிவகாசி உழவாரப்பணி குழுவினர் மற்றும் கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

கோவில் நிரந்தர உண்டியல் மூலம் ரூ. 3 கோடியே 10 லட்சத்து 40 ஆயிரத்து 748 ரூபாய் காணிக்கையாக கிடைத்துள்ளது. மேலும் 2 கிலோ 800 கிராம் தங்கமும், 25 கிலோ வெள்ளியும், பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். 292 அயல் நாட்டு பண நோட்டுகளும் காணிக்கையாக கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to TelegramShare to Print

Related posts

காவிரி – கோதாவரி திட்டம் குறித்து பிரதமரிடம் பேசினேன் – ஈ.பி.எஸ்

EZHILARASAN D

பொறியியல் சேர்க்கைக்கு வேதியியல் பாட மதிப்பெண்கள் கட்டாயமா? – உயர்கல்வித்துறை விளக்கம்

G SaravanaKumar

கிரிப்டோ கரன்சி மூலம் அதிக லாபம் தருவதாக கூறி 100 கோடி வரை மோசடி – கண்ணீருடன் புகார் அளித்த மக்கள்!

Web Editor